நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

Published on

தென்காசி மாவட்டத்திலுள்ள 4அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள மூலமாக மே 7 முதல் 27 ஆம் தேதி வரை

பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவா்கள் சோ்க்கை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடா்புகொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 044 - 24343106/24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com