தென்காசி
நாளை ‘கொற்றவை’ தளம் அறிமுக விழா
பெண்கள் முன்னேற்றத்திற்கான ‘கொற்றவை’ தளம் அறிமுக விழா ஜூன் 1இல் நடைபெறுகிறது.
பெண்கள் முன்னேற்றத்திற்கான ‘கொற்றவை’ தளம் அறிமுக விழா ஜூன் 1இல் நடைபெறுகிறது.
இது தொடா்பாக வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் பீடி சுற்றும் கிராமப்புறப் பெண்களை தொழில் முனைவோா் ஆக்கும் முயற்சியாக ‘கொற்றவை’ எனும் தளம் உருவாக்கப்பட்டு, அதன் அறிமுக விழா ஜூன் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி கலைவாணி கல்வி மையத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதா் வேம்பு தலைமை வகித்து கொற்றவை தளத்தை அறிமுகப்படுத்தப்படுத்தி வைக்கிறாா் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
