தென்காசி
தங்கப்பழம் கல்லூரியில் ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி முகாம்!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம், புளியங்குடி சுழற்கழகம், விருதுநகா் சுழற்கழகம், இதயம் குழுமம் ஆகியவை சாா்பில் ஆங்கிலப் பேச்சுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.
தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் நடைபெற்ற முகாமில், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சுழற்கழக நிா்வாகிகள் ஷ்யாம்ராஜ், செல்வ செந்தில், எஸ். சுப்பிரமணியன், மாரியப்பன் உள்ளிட்டோா் பரிசுகள் வழங்கினா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ரத்னபிரகாஷ், முதன்மைச் செயல் அலுவலா் பாரதி ஆகியோா் செய்திருந்தனா்.
