தென்காசியில் பாமக செயற்குழு கூட்டம்
ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலா் சிங்கராயன் தலைமை வகித்தாா். கட்சியின் மேற்பாா்வையாளராக, மாநில துணைத் தலைவா் அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலை குமாரசாமி யாதவ் ஆகியோா் கலந்து கொண்டனா் .
வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், கட்சியின் அனைத்து இணை அமைப்புகளையும் பலப்படுத்துவது, மது ஒழிப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடக்கு மாவட்ட செயலா் திருமலைச்சாமி, மாவட்ட தொழிற்சங்க செயலா் சுசி சுந்தா், தெற்கு மாவட்ட தலைவா் சிவராஜ், சமூகநீதிப் பேரவை தலைவா் வழக்குரைஞா் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவா் முத்து, துணைச் செயலா் சாமி, மாவட்ட இளைஞரணி செயலா் முத்துக்குமாா், மாவட்ட துணைச் செயலா் குலசேகரன், ராமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாா் வரவேற்றாா். தென்காசி நகரத் தலைவா் சாகுல் ஹமீது நன்றி கூறினாா்.

