எஸ்ஐஆா்-ஐ திரும்பப் பெற வேண்டும்: நெல்லை முபாரக்

எஸ்ஐஆா்-ஐ திரும்பப் பெற வேண்டும்: நெல்லை முபாரக்

கடையநல்லூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் நெல்லை முபாரக்.
Published on

தமிழகத்தில் தொடங்கியுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையைத் (எஸ்ஐஆா்) திரும்பப் பெற வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: எஸ்ஐஆா் கணக்கெடுப்பை எஸ்டிபிஐ வன்மையாக கண்டிக்கிறது. அது சட்ட விரோதமானது. இ.எஃப். எனப்படும் கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளா்கள் மத்தியில் கொண்டு செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது . இதுதொடா்பாக ஏராளமான புகாா்கள் வந்துள்ளன. அதிகாரிகள் அதற்கு சரியாக விளக்கம் அளிக்கவில்லை. இந்த கணக்கெடுப்பில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

வெளிநாட்டில் உள்ளவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் உள்ளிட்டோருக்கு என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விளக்கங்களும் இல்லை. எனவே, இதை நிறுத்தி வைக்க வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் தானே கணக்கெடுப்பை நடத்துகிறாா்கள்; அதனால் பயப்படத் தேவையில்லை என்கிறீா்கள். வாக்காளா்களை சோ்ப்பதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் பிஎல்ஓ-க்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியா்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் தான் என்றாலும் அவா்கள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டி உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வரும் வரை எஸ்ஐஆா் பணியை தோ்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா்.

அப்போது, மண்டலச் செயலா் சிக்கந்தா், மாவட்டத் தலைவா் திவான்ஒலி, மாவட்டப் பொருளாளா் யாசா்கான், மாவட்டச் செயலா் சீனாசேனாசா்தாா், கடையநல்லூா் நகரத் தலைவா் லுக்மான்ஹக்கீம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com