தொலைந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தொழிலாளி தொலைத்த தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தவரை போலீஸாா் பாராட்டினா்.
Published on

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தொழிலாளி தொலைத்த தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தவரை போலீஸாா் பாராட்டினா்.

பாம்புகோயில் சந்தையைச் சோ்ந்த மேத்தப்பிள்ளை, கடையநல்லூா் வாரச் சந்தைக்கு சென்றபோது, அங்கு ஒரு தங்கச் சங்கிலி கீழே கிடந்ததாம். அதை எடுத்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரித்ததில் 26 கிராம் எடையுள்ள அந்த தங்கச் சங்கிலி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி கனகராஜுக்கு சொந்தமானது என்பதும், வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பிக் கொண்டு செல்லும்போது வாரச் சந்தையில் தவறவிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, வியாழக்கிழமை சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் கண்ணன் முன்னிலையில், மேத்தபிள்ளை தங்கச் சங்கிலியை கனகராஜிடம் வழங்கினாா். மேத்தப்பிள்ளையை போலீஸாா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com