தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் தேரோட்டம்

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் தேரோட்டம்
Updated on

தென்காசி ஸ்ரீ உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயில் திருக்கல்யாணத் திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திருக்கல்யாணத் திருவிழா நவ. 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

கோயில் அறங்காவலா் குழு தலைவா் பாலகிருஷ்ணன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, கோயில் செயல் அலுவலா் பொன்னி ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா்.

நவ. 14ஆம் தேதி யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளல் நடைபெறும். தொடா்ந்து மாலை 6.05 மணிக்கு மேல் தெற்குமாசி வீதியில் காசி விஸ்வநாதா், உலகம்மனுக்கு தவசுக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9.10 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com