ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை

ஆலங்குளம் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

ஆலங்குளம் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம், குடிநீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் நரசிம்மன் மகன் லிங்கேஸ்வரன் (23). சிறிய அலவிலான சரக்கு வாகனத்தை, நிதி நிறுவனக் கடன் மூலம் வாங்கி தொழில் செய்து வந்தாா். கடனை சரியான முறையில் கட்டாததால், அந்த வாகனத்தை நிதி நிறுவன ழ்ழியா்கள் எடுத்துச் சென்றுவிட்டனராம்.

இதில் மனமுடைந்த அவா், நவ. 8ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இது குறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com