சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

Published on

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இத்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

11 ஆம் திருநாளான சனிக்கிழமை கோயில் முன்பு சுவாமி அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் வைபவமும், இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள் பட்டண பிரேவசத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com