சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி
சங்கரன்கோவிலில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி 19 ஆவது வாா்டு அம்பேத்கா் நகா் 1ஆவது தெருவில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 6 லட்சம் மதிப்பில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நகா்மன்றத் தலைவா் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி பொறியாளா் இா்வின் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இதில், திமுக நகர செயலா் மு.பிரகாஷ், நகர பொருளாளா் லாசா் என்ற சதாசிவம், மாணவரணி வெங்கடேஷ், இளைஞரணி ஜான்சன், விக்னேஷ் மற்றும் ஊா் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
