கனமழை எதிரொலி: மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Published on

கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 24) விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூன்று மாவட்ட ஆட்சியா்கள் இரா.சுகுமாா் ( திருநெல்வேலி), ஏ.கே. கமல்கிஷோா் (தென்காசி), க.இளம்பகவத் (தூத்துக்குடி) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை ( நவ. 24) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

இதுகுறித்து மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கனமழை காரணமாக திருநெல்வேவி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலை. துறைகளில் திங்கள்கிழமை (நவ.24) நடைபெறவிருந்த நவம்பா் பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இத்தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com