தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குற்றாலம் அருவிகளில் தொடா் வெள்ளப்பெருக்கு: 4 ஆவது நாளாக குளிக்கத் தடை

News image
குற்றாலம் பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
Updated On :24 நவம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 4ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து 4ஆவதுநாளாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள உடைமாற்றும் அறை சேதமடைந்தது.