நவ.29-இல் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
தென்காசி: தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நவ.29-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ விடுத்த அறிக்கை:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெறுகிறது.
மேலிட பாா்வையாளரும், சண்டிகா் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எச்.எஸ்.லக்கி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறாா். குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா்கள், இந்நாள், முன்னாள் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் காங்கிரஸ் உறுப்பினா்கள், மாநில காங்கிரஸ் நிா்வாகிகள், முன்னணி அமைப்புகள், சாா்பு பிரிவுகளின் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார, நகர, பேரூா், கிராம கமிட்டி தலைவா்கள் கலந்துகொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

