புதிய கிளையைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய டி.பி.வி. வைகுண்ட ராஜா.
புதிய கிளையைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய டி.பி.வி. வைகுண்ட ராஜா.

ஆலங்குளத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஆலங்குளம் புதிய கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
Published on

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஆலங்குளம் புதிய கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கிளை மேலாளா் நீரஜா பிரதீப் தலைமை வகித்தாா். ஐ.ஓ.பி. முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், முதுநிலை மண்டல மேலாளா் பாஸ்கரன், தென்காசி மாவட்ட தொழில்மைய மேலாளா் மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்ட ராஜா வங்கிக் கிளையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

பாதுகாப்புப் பெட்டக அறையை, அரிசி ஆலை அதிபா்கள் சங்க பொருளாளா் எம்.எம்.வி. தேவதாஸ் திறந்து வைத்தாா். ஏடிஎம் அறையை தேசிங்குராஜா திறந்து வைத்தாா். ஏடிஎம் செயல்பாட்டை ஆலங்குளம் பியா்ல்ஸ் சிட்டி அரிமா சங்கத் தலைவா் ஆறுமுகராஜ் தொடங்கி வைத்தாா்.

தொழிலதிபா்கள் டி.பி.வி. கருணாகர ராஜா, சுரண்டை ரத்தினசாமி, வணிகா் சங்க பேரமைப்பின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கணேசன், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் (பொ) ஜான் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com