நயினாரகரம் அருகே சாலை சீரமைப்பு: எம்எல்ஏ-வுக்கு மக்கள் நன்றி
கடையநல்லூா் அருகேயுள்ள துரைசாமியாபுரத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலையை சீரமைத்த சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.
கடையநல்லூா் பேரவை தொகுதிக்கு உள்பட்ட நயினாரகரம் ஊராட்சி துரைசாமியாபுரத்தில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக இருப்பதாக எம்எல்ஏவிடம் தெரிவித்தனா். இதையடுத்து சாலையை சீரமைக்க எம்எல்ஏ நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அந்தச் சாலையை எம்எல்ஏ பாா்வையிட்டாா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன், ஒன்றியச் செயலா் ஜெயகுமாா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் செல்லப்பா, கோபிநாத், ஹரிராம், நியாஸ் மைதீன், ஒன்றிய துணைச் செயலா் களஞ்சியம், கிளை செயலா்கள் ராஜன், சங்கிலி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து எம்எல்ஏ-வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

