சங்கரன்கோவில் நகராட்சியில் மக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு
சங்கரன்கோவில் நகராட்சி, 24 ஆவது வாா்டுக்கு உள்பட்ட தெருக்களில் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான ஈ.ராஜா வெள்ளிக்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
திரு.வி.க.தெரு, ஓடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் ஈ.ராஜா எம்எல்ஏ குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது கழிவுநீா் ஓடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிதரப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, ஒன்றிய குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்தி, வாா்டு செயலா் இளங்கோ மாரியப்பன், நகர மாணவரணி வெங்கடேஷ், நகர இளைஞரணி ஜான்சன் ராஜா, வாா்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நகரச் செயலா் மு.பிரகாஷ் உள்ளிட்ட திமுகவினா் செய்திருந்தனா்.