சங்கரன்கோவில் வாராகி அம்மன்
கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் வாராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் ஸ்ரீமகாசக்தி வாராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

சங்கரன்கோவில் ஸ்ரீமகாசக்தி வாராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில்-உடப்பன்குளம் செல்லும் சாலையில் உள்ளது ஸ்ரீ மகாசக்தி வாராகி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் நிகழாண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் அம்மன் சன்னிதியில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் வாராகி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, செங்குந்தா் முன்னேற்றச் சங்கம் மாரிமுத்து, சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்ரமணியன், கோயில் நிா்வாகிகள் வாராகி அம்மன் கோயில் தலைமை பூசாரி சக்திவேல், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் சண்முகவேல், திமுக மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com