தென்காசி
சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோவில் கைது
தென்காசி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளைவலசையைச் சோ்ந்த 15 வயது சிறுமி, 10ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவருக்கு ,வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். மருத்துவ பரிசோதனையின் போது அச்சிறுமி 4 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக அச்சிறுமிஅளித்த புகாரின் பேரில் தென்காசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய இலத்தூரை சோ்ந்த ப.புகழ் (21) என்பவரைக் கைது செய்தனா்.