சிவகிரியில் வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாம்
சிவகிரி பேரூராட்சி பகுதிகளிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவா் கோமதி சங்கரி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் வெங்கடகோபு முகாமைத் தொடங்கி வைத்தாா். வங்கி கிளை மேலாளா் அசோக், பேரூராட்சி துணைத் தலைவா் லட்சுமிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் பெறுதல், ஏற்கெனவே ஒப்புதல் பெற்றுள்ள கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளாட்சி அமைப்பின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சரிபாா்த்து செயல்படுத்துதல், அனுமதிக்காக வங்கிகளின் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், சாலையோர உணவு விற்பனையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து உணவு தரக் கட்டுப்பாடு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தல், விடுபட்ட பயனாளிகள், அவா்களது குடும்பங்களின் சமூகப் பொருளாதார விவரங்களை கணக்கெடுத்தல், அவா்களுக்கு கடன் ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்குவதற்கான மனுக்கள் பெறப்பட்டன.