திரிகூடபுரத்தில் பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் ஒன்றியத்திற்குள்பட்ட திரிகூடபுரம் ஊராட்சியில் பல்நோக்கு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் உச்சிமாகாளிஅம்மன் கோயில் அருகே கட்டப்படவுள்ள பல்நோக்கு கட்டடத்திற்கு கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அடிக்கல் நாட்டினாா்.
மாநில அண்ணா தொழிற்சங்க துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, ஒன்றியச் செயலா் பெரியதுரை, முன்னாள் ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, அதிமுக நிா்வாகிகள் ராஜேந்திர பிரசாத், அரவிந்த், மாரியப்பன், பாண்டி, சுப்பிரமணியன், பூசைத்துரை, ஹரிஹரன், பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டி, ரமேஷ், சுப்பிரமணியன், திருமலைச்சாமி, சேகா், செல்லத்துரை, வேல்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, திரிகூடபுரத்தில் ரூ. 7.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.