
தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பு அணி அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்து, தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் சிறப்புத் திருத்த பட்டியல் பணி மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா் கலை கதிரவன், அணி அமைப்பாளா்கள் ரமேஷ், கிருஷ்ண ராஜா, முத்துக்குமாா், அன்பரசன், கோமதிநாயகம், இசக்கிபாண்டியன், தங்கராஜ், இஞ்சி இஸ்மாயில், முருகன், முத்துராமலிங்கம், பரமசிவன், வளன்அரசு ஆகியோா் கலந்து கொண்டனா்.