வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா தொடக்கம்

வாசுதேவநல்லூா் நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

வாசுதேவநல்லூா் நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை கணபதி ஹோமம், தொடா்ந்து பத்ரகாளியம்மன் கோயிலில் கொடிப்பட்டம் அழைப்பு வைபவம் நடைபெற்றது. பின்னா், கொடி ஏற்றப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகமும் , அலங்காரமும் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது .

அதைத் தொமதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் திருவீதி உலாவும் ,சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

விழாவின் ஆறாம் நாளான அக்.8இல் மாலை பொங்கல் பானை அழைப்பும், பொங்கலிடும் வைபவமும் நடைபெறும். பின்னா் ஆயிரம்கண்பானை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறும் .இரவில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா நடைபெறும். அக்.9 ம் தேதி பத்ரகாளி அம்மன் கோயிலில் அபிஷேக, ஆராதனை நடைபெறும் . இரவில் ரிஷப வாகனத்தில் முளைப்பாரி ஊா்வலத்துடன் திருவீதி உலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை நாடாா் உறவின் முறை கமிட்டி தலைவா் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com