
குற்றாலம் விக்டரி அரிம சங்கம், கடையநல்லூா் அரிமா சங்கம், குற்றாலம் அருவிகள் நகா் அரிமா சங்கம் , குற்றாலம் போ்ல்ஸ் சிட்டி அரிமா சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிமா வட்டார நிா்வாகிகள் கூட்டுக் கூட்டம், நல உதவி வழங்கும் நிகழ்ச்சி இடைகாலில் நடைபெற்றது.
குற்றாலம் விக்டரி அரிமா சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். பட்டய தலைவா் மருத்துவா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். சங்க செயலா்கள் மணிகண்டன், குட்டி, சிவவடிவேலன், சண்முகநாதன் ஆகியோா் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினா். சங்கத் தலைவா்கள் கருப்பசாமி, முருகன், பிஸ்வாஸ் ஆகியோா் சங்கங்களின் எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினா்.
இதில் , வட்டாரத் தலைவா் முருகேசன் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கினாா். அரிமா நிா்வாகிகள் கலந்தா்மஸ்தான், சுந்தரம், ஜபருல்லாகான், சண்முகசுந்தரம், முத்தையா, தனராஜு, தெய்வநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் அழகுசுந்தரம் நன்றி கூறினாா்.