ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த்.

கனிமவள லாரி, கிரஷா் உரிமையாளா்கள், காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

Published on

தென்காசி மாவட்டத்தில் கனிமவள லாரி உரிமையாளா்கள் மற்றும் கிரஷா் உரிமையாளா்களுடன் வாகன விபத்துகளை தவிா்த்தல் மற்றும் கால, வேக வரையறைகளை வாகனங்கள் தவறாது பின்பற்றுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டகாவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தலைமை வகித்தாா். வட்டார போக்குவரத்து அலுவலா் சரவணபவன், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவிஇயக்குநா் டி.வினோத், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தமிழ்இனியன், கிளாட்சன் ஜோஸ், வட்டாட்சியா் ஆ. வெங்கடசேகா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அனைத்து கிரஷா் உரிமையாளா்கள், இந்தியன் டிரைவா் சொசைட்டி செயலா், செங்கோட்டை லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை செங்கோட்டை தேன்பொத்தை அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் கால அளவை மீறி வாகனம் ஓட்டியபோது நடைபெற்ற விபத்து தொடா்பான வழக்கில் அந்த வாகனத்துக்கு கால வரையறையை மீறி கனிமங்களை வழங்கிய கிரஷா் உரிமையாளரும் எதிரியாக சோ்க்கப்பட்டுள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியபடி கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தென்காசி மாவட்டத்துக்குள் பயணிப்பதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள கால வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணிமுதல் மாலை 3 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிமுதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை மட்டும் கிரஷரிலிருந்து வாகனங்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும். இந்த வரையறையை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிரஷா் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிக பாரம்கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிமுறைகளை பின்பற்றாத நிலையில், அத்தகைய வாகனங்களால் விபத்து ஏற்படும்போது, உரிய நிகழ்வுகளில் கிரஷா் உரிமையாளா், நடத்துநா் பொறுப்பாவா்.

நகா் பகுதியில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுநா்கள் வாகனத்தை இயக்கும்போது கைப்பேசி மற்றும் ஹெட் போன் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. புளியரை சோதனை சாவடியில் கண்டிப்பாக நடைசீட்டை பதிவு செய்ய வேண்டும்.

கனிமவளங்கள் ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் காற்றில் கனிமங்கள் பறக்காதவாறு கனிமங்களை சுற்றி தாா்பாய் போட்டு மூடியிருக்க வேண்டும்.

அனைத்து கனரக வாகனங்களிலும் ஈஹள்ட் இஹம்ங்ழ்ஹ பொருத்தப்பட வேண்டும். கனரக வாகன கண்ணாடிகளில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கான கருப்பு கலா் ஸ்டிக்கா் ஒட்டக்கூடாது. ஒட்டப்பட்டுள்ள வாகனங்களிலிருந்து அவற்றை இரண்டு நாள்களுக்கு அகற்ற வேண்டும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com