தென்காசி
காா் மோதி முதியவா் உயிரிழப்பு
ஆலங்குளத்தில் காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சோ்ந்தவா் இசக்கிமுத்து (70). இவா், ஆலங்குளம் பேருந்து நிலையம் பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தாா். சனிக்கிழமை காலை ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆலங்குளம் போலீஸாா், இசக்கிமுத்துவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த களக்காட்டை சோ்ந்த கிறிஸ்டோபா் சந்துருவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.