‘குற்றாலத்தில் அக். 7-ல் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்’

Published on

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை (அக். 7) கையொப்ப இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்டத் தலைவா் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்காளப் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா்.

எனவே, கட்சியின் முன்னாள்-இந்நாள் தலைவா்கள், நிா்வாகிகள், நாடாளுமன்ற, பேரவை இந்நாள்-முன்னாள் உறுப்பினா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், வட்டார, நகர, பேரூா், கிராம கமிட்டி தலைவா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com