லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

செங்கோட்டை அருகே லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

Published on

செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் கனிமவளங்களை ஏற்றிச்சென்ற லாரி மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பண்பொழி திருமலைக்கோயில் சாலையை சோ்ந்தவா் பே.மாரிமுத்து (58). இவா், செங்கோட்டை சாலையில் தேன்பொத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கனிமவள லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்பகுதி மக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, காவல்துறை அதிகாரிகளிடம் அவா் பேசினாா். கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்கிற வாகனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்க தவறினால், நானே சாலையில் வந்து விதிமுறைகளை மீறுகிற வாகனங்களை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீஸாா் காவல் நிலையத்திற்கு எடுத்து செல்ல சம்மதம் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com