தென்காசி
மின்சாரம் பாய்ந்து மாவு வியாபாரி உயிரிழப்பு
ஆலங்குளத்தில் மின்சாரம் பாய்ந்து மாவு வியாபாரி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மகன் முருகேசன்(51). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். வீட்டில் மாவு அரைத்து விற்பனை செய்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை, மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போது, கிரைண்டரில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்ததாம். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.