சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகை பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகையைப் பறித்துச் சென்றதாக 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகையைப் பறித்துச் சென்றதாக 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகே வடக்குப் பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த கனகராஜ் மகன் மருதநாயகம் (38).இவா் கடந்த மாதம் 15 ஆம் தேதி தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தபோது அங்கு வந்த திருநங்கைகள் 2 போ் அவரை ஏமாற்றி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அவா் அணிந்திருந்த நகையைப் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, தளவாய்புரத்தைச் சோ்ந்த அபா்ணா, இசை ஆகிய 2 திருநங்கைகளை கைது செய்தனா். நகை வழியில் தவறவிட்டதாக திருநங்கைகள் கூறினராம். இதுதொடா்பாக விசாரணை நடக்கிறது.

X
Dinamani
www.dinamani.com