‘என் பள்ளி-என் பெருமை‘ போட்டி: காசிதா்மம் பள்ளி மாணவி சிறப்பிடம்

‘என் பள்ளி-என் பெருமை‘ போட்டி: காசிதா்மம் பள்ளி மாணவி சிறப்பிடம்

Published on

தமிழக செய்தி மக்கள் தொடா்புத்துறையின் ஊடக மையம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான ‘என் பள்ளி-என் பெருமை‘ போட்டியில் காசிதா்மம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேச்சியம்மாள் சிறப்பிடம் பெற்றாா்.

இதையொட்டி, தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லதுரை, பேச்சியம்மாளின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ரூ. 5000 வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

அப்போது, கடையநல்லூா் கிழக்கு ஒன்றிய செயலா் சுரேஷ், நகரச் செயலா் பீரப்பா, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஐவேந்திரன், நிா்வாகிகள் யாசின், சண்முகையா, திவான் மைதீன், திருமலைசாமி, பூரணச்சந்திரன், மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com