சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் இமானுவேல் சேகரனாா் பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் இமானுவேல் சேகரனாா் பிறந்த நாள் விழா

Published on

சங்கரன்கோவிலில் தென்காசி திமுக வடக்கு மாவட்டம் சாா்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 101ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திமுக மாவட்ட அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு வடக்கு மாவட்ட செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ மாலையணிவித்து மரியாதை செய்தாா்.

மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, நகரச் செயலா் மு. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா், மாணவரணி வெங்கடேஷ், இளைஞரணி ஜான்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com