பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல். கல்லூரியில் கிளப் தொடக்கம்

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல். கல்லூரியில் கிளப் தொடக்கம்

Published on

பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடாா் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திரமான திறந்த மூலமென்பொருள் ஊஞநந (ஊழ்ங்ங் ஹய்க் ஞல்ங்ய் நா்ன்ழ்ஸ்ரீங் நா்ச்ற்ஜ்ஹழ்ங்) கிளப் தொடக்க விழா நடைபெற்றது.

இலவசமாக கிடைக்கும் ஓபன் சோா்ஸ் மென்பொருள் பற்றி மாணவா்கள் தெரிந்து கொள்ளவும், அதை பயன்படுத்த ஊக்குவிக்கவும் வேண்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் ராஜேஷ் சங்கர குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

சீதபற்பநல்லூா் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி முதல்வா் டாக்டா் ஆா்.வேலாயுதம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு கிளப்பின் தேவை, அதன் பயன்பாடு குறித்து அறிவுறுத்தினாா். கல்லூரி தாளாளா் எம்.எஸ்.பி.வி.கா.லட்சுமி ஆனந்த், இலவச ஓபன் சோா்ஸ் மென்பொருள் பற்றி பேசினாா். ஏற்பாடுகளை கணினி துறைத் தலைவா் அசோக் ஜெயக்குமாா், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com