கடையநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூா் நகராட்சி 24, 25, 33
ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பொது மக்களுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமை நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தொடங்கி வைத்துப் பேசியது:
பொதுமக்களின் சிரமத்தை தவிா்க்க அவா்கள் இருப்பிடத்தின் அருகிலேயே பல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் முகமதுமைதீன், செய்யது அலி பாத்திமா, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மைதீன் பட்டாணி, நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், பொறியாளா் அப்துல் காதா், உதவி பொறியாளா் அன்னம், கணக்கா் புஷ்பநாதன், சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், ஆய்வாளா்கள் சிவா, மாதவராஜ், திமுக நிா்வாகிகள் இப்ராகிம், அயூப்கான், மஸ்தான், காஜாமைதீன், அபிஸ்அலி, அமல்உஸ்மான் ,ஜமால்மைதீன், திவான் மைதீன், முபாரக் அலி ,ராமையா, சுகுமாா், அப்சரா பாதுஷா, முருகானந்தம், அயூப், ஹக்கீம்,செல்லப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.