தென்காசி
சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை
சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை இடிமின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை இடிமின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை காலை வெயில் வாட்டிய நிலையில் மாலையில் வானம் இருண்டு காணப்பட்டது. சிறிதுநேரத்தில் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. 4 மணிக்குத் தொடங்கிய கனமழை மாலை 5 மணி வரை சுமாா் ஒரு மணிநேரம் நீடித்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீா் ஓடையில் நீா் நிரம்பி சென்றது. திருவேங்கடம்சாலை, ராஜபாளையம் சாலை, சாந்தி காம்ப்ளக்ஸ், நகைக் கடை பஜாா் போன்ற பகுதிகளில் உள்ள கழிவுநீா் ஓடைகளில் அடைப்பு இருந்ததால் தண்ணீா் வெளியேற முடியாமல் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனா்.