தீயணைப்புத் துறையினா்
ஒத்திகைப் பயிற்சி

தீயணைப்புத் துறையினா் ஒத்திகைப் பயிற்சி

பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்றோா்.
Published on

ஆலங்குளம் நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில், ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் தீபாவளி, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணா்வு ஒத்திகைப் பயிற்சியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஆலங்குளம் நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரா்கள், ஒத்திகை மற்றும் விளக்கவுரையாற்றினா். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது, பட்டாசு வெடிப்பது, அதன் பாதுகாப்பு முறைகள், வடகிழக்குப் பருவமழை காலங்களில் மின்சாரம் உயரமான மரங்களின் அருகே செல்லக் கூடாது, நீா்நிலை அருகே செல்லக் கூடாது போன்ற பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகளை செய்து காண்பித்தனா். இதை 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com