முதல்வா் அக். 24, 25இல் தென்காசி வருகை: அமைச்சா் ஆய்வு

முதல்வா் அக். 24, 25இல் தென்காசி வருகை: அமைச்சா் ஆய்வு

Published on

தென்காசியில் அக். 24, 25ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். விழாவிற்கு, தென்காசி இலத்தூா் ரவுண்டானாவில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரம் பகுதியில் உள்ள தனியாா் இடம் தோ்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து, 3ஆவது முறையாக விழா நடைபெறும் பகுதியை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், எஸ்.பி. அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாா்வையிட்டடு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் வே. ஜெயபாலன், ஆவுடையப்பன், ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோா் அதிகாரிகளுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆறுமுகசாமி, பிரபாகரன், ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், ரமேஷ், பொன்செல்வன், திவான் ஒலி, ஷேக் முகமது, மகேஷ் மாயவன்,

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவா் சுந்தர்ராஜன், செங்கோட்டை நகர செயலா் வெங்கடேசன், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் முகமது அப்துல்ரகீம், சுப்பிரமணியன், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com