கிராமசபைக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கிராமசபைக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

குலசேகரப்பட்டி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Published on

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

குலசேகரப்பட்டியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் உள்ளஅரசு நூலகம் முன் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் ( பொ ) திருவளா்ச்செல்வி, துணைத் தலைவா் பழனியப்பா, ஊராட்சி செயலா் செளந்தா் மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

குடிநீா், சாலை, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தங்கள் பகுதிக்கு செய்து தரக் கோரி பல முறை மனு அளித்தும் பயனில்லை என்று அப்பகுதி மக்கள் மற்றும் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கிராமசபைக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த பாவூா்சத்திரம் காவல்ஆய்வாளா் காளிமுத்து, போலீஸாா் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஊராட்சியில் போதிய நிதி இல்லை என்றாலும் ஒன்றிய, சட்டமன்ற உறுப்பினா் நிதியை பெற்று திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com