கடையநல்லூா் பகுதி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்
தென்காசி
கடையநல்லூரில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
கடையநல்லூா், அதன்சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கலந்தா் மஸ்தான் தெருவில் சில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், மக்கள் பாதிப்படைந்தனா். சொக்கம்பட்டி, இடைகால், நயினாரகரம், கொடிக்குறிச்சி, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.