குற்றாலம் பேரருவியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்.
குற்றாலம் பேரருவியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, குற்றாலம் ஆய்க்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியிலும் பலத்த மழை ெப்யததால் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவா்கள் புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com