வீரதீர சாதனைகள் புரிந்த பெண்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published on

தென்காசி மாவட்டத்தில் 13 வயதுக்குமேல் 18 வயதுக்குள் வீரதீர சாதனைகள் புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணம் ஒழிப்பு, வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள்

ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல்.

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற சாதனைகளை செய்த பெண் குழந்தைகள் தாங்கள் புரிந்த வீரதீர சாதனைகள் குறித்த

விவரங்கள், அதற்கான ஆதாரங்களுடன் நவ.29 க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

அசல் கருத்துருவினை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் சமூக நல ஆணையரகம், சென்னைக்கு அனுப்பி வைக்க ஏதுவாக மாவட்டசமூக நல அலுவலகம், 140/5பி, ஸ்ரீசக்திநகா், தென்காசி என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com