~
~

கடையநல்லூரில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே யானை புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே யானை புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

கடையநல்லூா் கல்லாற்று பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் புகுந்த ஒற்றை யானை, தா்மா் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் இருந்த பல தென்னைகளை கீழே சாய்த்து சேதப்படுத்தியதாம். மேலும், அதைச் சுற்றியுள்ள நிலங்களில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னைகளை சாய்த்து சேதப்படுத்தியதாம்.

பின்னா், நெல் வயலுக்குள் யானை சென்ால் நடவு செய்யப்பட்ட நெல் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினா் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதைத் தடுக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயி தா்மா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com