தென்காசி
சேரன்மகாதேவி அருகே தண்ணீா் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
சேரன்மகாதேவி அருகே தண்ணீா் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியை அடுத்த கங்கனாங்குளம் அருகே உள்ள புலவன் குடியிருப்பைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35).
இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். இந்நிலையில் இவரது ஒன்றரை வயது மகனான பிரேம்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, யாரும் கவனிக்காத சமயத்தில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் குழந்தையின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.