தென்காசியில் திமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

Published on

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குத்துக்கல்வலசை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு அரிசி, இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்து தூய்மை பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜே.கே. ரமேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் இசக்கிப் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ரகுமான் சாதத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா்கள் சண்முக மணிகண்டன், ஷோபனா ராணி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா்கள் ராமராஜ், முத்து சுப்பிரமணியன், மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளா் ஊா்மேலழகியான் சுப்பிரமணியன், சமூக செயற்பாட்டாளா் மக்மூத் சையது, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் வரவேற்றாா். துணைச் செயலா் ஆனந்தன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com