கடையநல்லூா் அருகே மலைப்பாம்பு மீட்பு

கடையநல்லூா் அருகே கால்வாயில் வந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே கால்வாயில் வந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

துரைச்சாமிபுரம் கால்வாய் மறுகாலில் மீன்களுக்காக வலை விரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கிக் கொண்டதை பாா்த்த அப்பகுதி மக்கள், கடையநல்லூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையிலான குழுவினா் வலையில் சிக்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com