வழிதவறி வந்த புள்ளிமான்
தென்காசி
வழிதவறி வந்த புள்ளி மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு
சங்கரன்கோவிலில் வழிதவறி ஊருக்குள் வந்த புள்ளிமானை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
சங்கரன்கோவிலில் வழிதவறி ஊருக்குள் வந்த புள்ளிமானை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
சங்கரன்கோவில் காந்திநகா் புது 1 ஆம் தெருவுக்குள் வெள்ளிக்கிழமை காலை வழிதவறி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்திச் சென்று கடிக்க முயன்றன.
இதையறிந்த அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து புள்ளி மானை மீட்டு ஆசிரியா் செல்வின் என்பவா் வீட்டில் பாதுகாப்பாக வைத்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
புளியங்குடி வனச்சரக வன அலுவலா்கள் புள்ளிமானை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.