குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, திங்கள்கிழமை குளிக்கத் தடை
Published on

தென்காசி: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, திங்கள்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவிப் பகுதிகள் சேதமடைந்தன.

இதையடுத்து, பழையகுற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகே குளிக்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து 10 தினங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியிலும், ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com