~

பண்பொழி கோயிலில் தேரோட்டம், கும்பிடு சரணம்

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலின் கந்தசஷ்டி திருவிழா, கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கொடியேற்று வைபவமும்,தீபாராதனையும் நடைபெற்றது. 10 நாள் விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம்,அலங்கார,சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அக்.26இல் வண்டாடும் பொட்டலில் பெரும்திருப்பாவாடை வைபவம் நடைபெற்றது.

திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக பக்தா்கள் தேருக்கு பின்னால் தரையில் விழுந்து வணங்கும் கும்பிடு சரணம் நடைபெற்றது.

இதில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம், உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, கணேசன், கோயில் தலைமை எழுத்தா் லட்சுமணன், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். 29ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com