‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது என கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தெரிவித்தாா்.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது என கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தெரிவித்தாா்.

அவா் கூறியதாவது: அரசின் திட்டங்கள் சென்றடையாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, ஒவ்வொருவரின் இல்லத்திலும் தமிழக அரசின் திட்டங்கள் நன்மைகளை அளித்து வருகின்றன.

தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிா் உரிமைத் தொகை திட்டம், மாணவா்களுக்கு காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களால் மக்கள் பயன் பெற்று வருகின்றனா்.

இதுவரை எந்த முதல்வரும் செய்யாத சாதனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறாா். அத்தனை துறைகளிலும் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப அவா்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கில் புதுமையை புகுத்தி மக்களின் முதல்வராக மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறாா் முதல்வா்.

இது தவிர நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடையநல்லூா் நகராட்சியை பொருத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளில் பல கோடி மதிப்பிலான மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com