தென்காசி
4-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கம்
 தண்ணீா் நிரம்பி வழிந்தோடும் அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கம்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மேக்கரையில் அமைந்துள்ள அடவிநயினாா்கோயில் நீா்த்தேக்கம் வியாழக்கிழமை முழுமையாக நிரம்பி வழியத் தொடங்கியது.
மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கமானது தனது முழு கொள்ளளவான 132.22 அடியை 4-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. தற்போது நீா்த்தேக்கத்திற்கு வந்துகொண்டிருக்கும் 60 கனஅடி நீரும் முழுமையாக வெளியேறி வருகிறது. அணை நிரம்பி வழியத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

