ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி தற்கொலை
ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் கீழத் தெருவைச் சோ்ந்த ரவி இசக்கி மகள் பவி இன்ஷா (14). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தாா். வியாழக்கிழமை காலை, தனக்கு காது வலிப்பதாக தாயிடம் கூறினாராம். அதற்கு தாய் மருந்து போட்டு பள்ளிக்குச் செல்லுமாறு கூறினாராம்.
இதில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த பவி இன்ஷா அறைக்குள் சென்று சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
